அண்மையில் என்னைக் கவர்ந்த விளம்பர உத்திகள்

படங்கள் தெரிய சற்று நேரம் பிடிக்கலாம். பொறுமை காக்கவும்.


3M நிறுவனத்தின் பாதுகாப்புக் கண்ணாடிக்கான விளம்பரம். விரும்புபவர்கள் திருட முயற்சிக்கலாம்.Axe Effect.. நோ கமெண்ட்ஸ்..!!சூப்பர் ஹீரோக்களுக்கே "தண்ணி காட்டும்" Budweiserபண்டிகைக்கு துணி "எடுப்பது" என்றால் இது தானோ?காலக் கொடுமை..! கோலா கொடுமை..!!இதுக்கும் நோ கமெண்ட்ஸ்..!!வானத்திலும் வித்தை காட்ட வைக்கும் Energiserதொலைக்காட்சித் தொடருக்கு அலுவலக குளிர்நீர் தொட்டியில் விளம்பரம்பல மைல் நடந்து தண்ணீர் சுமந்து செல்லும் பெண்களுக்கு சமர்ப்பணம்தி எகானமிஸ்ட் பத்திரிக்கை - மூளைக்காரர்களுக்குதி எகானமிஸ்ட் பத்திரிக்கைக்கான இந்த விளம்பர உத்தியே இந்தப் பதிவின் மிகச் சிறந்தது


நன்றி: Adlova

புதிய பொருள் உருவாக்கம் (New Product Development)

வெற்றிகரமான புதிய பொருட்களை உருவாக்குவது, ஒரு நிறுவனத்தின் தொடர்ந்த வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாகும். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதிய பொருட்களின் மீது ஒரு கவர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். போட்டியாளர்கள், இத்தகைய புதிய பொருட்களை உருவாக்குவதில் தங்கள் உழைப்பினைச் செலுத்தத் தயாராகவே இருப்பார்கள். இவற்றுக்கிடையே ஒவ்வொரு நிறுவனமும் புதிய பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

1980-களின் இறுதியில் பூஸ், ஆலன், ஹாமில்டன் (Booz, Allen, Hamilton) ஆகியோர் தமது புத்தகத்தில் புதிய பொருட்களை ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். நிறுவனம் அல்லது சந்தைக்குப் புதியதான பொருளை இவர்கள் புதிய பொருள் என்று வகைப்படுத்துகின்றனர். அந்த ஆறு வகைகளாவன:

1. உலகத்திற்கே புதிய பொருட்கள் (New-to-the-World Products): இவை, தமக்கென ஒரு புதிய சந்தையை உருவாக்க வல்லவை.
2. புதிய பொருள் பிரிவுகள் (New Product Lines): இவை, தற்போது நடப்பில் இருக்கும் சந்தை ஒன்றில் ஒரு நிறுவனம் புதிதாகக் களம் புக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வல்லவை.
3. தற்போது நடப்பில் உள்ள பொருட்பிரிவுகளில் புதிய சேர்ப்புகள் (Additions to Existing Product Lines): ஏற்கெனவே நடப்பில் உள்ள பொருட்பிரிவுகளில் புதிதாக சேர்க்கப்படும் பொருட்கள் இவை ஆகும். புதிய நறுமணம், புதிய சுவை, புதிய அளவுகள் என்று இவை சேர்க்கப்படும்.
4. நடப்பில் உள்ள பொருளுக்கு முன்னேற்றங்கள் செய்வதன் மூலம் (Improvements/Revisions to Existing Products): நடப்பில் உள்ள பொருளின் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்படுத்தி வாடிக்கையாளர் மனதில் அதிக பயனை உணரச் செய்து, நடப்பில் உள்ள பொருளுக்கு மாற்று உருவாக்குதல்.
5. மாறுபட்ட பொருள் நிலைப்படுத்தல் (Product Repositionings): புதிய சந்தை அல்லது சந்தைப் பகுதிக்காக நடப்பில் உள்ள பொருளை புதுமையாக நிலைப்படுத்துவதன் மூலம் புதிய பொருளை உருவாக்குதல்.
6. விலை குறைந்த பொருள் (Cost Reductions): குறைந்த விலையில் சமமான செயல்திறனை அளிக்கும் புதிய பொருட்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் மேற்கண்ட அனைத்தும் கலந்த புதிய பொருள் கொள்கையை வகுத்துச் செயல்படும். இதில் மார்க்கெட்டிங் துறை முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கூட சோனி (SONY) நிறுவனம், புதிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து வெற்றி பெறுவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. கையில் எடுத்துச் செல்லும் வானொலிப் பெட்டி (portable radio), ட்ரிநிட்ரான் தொலைக்காட்சிப் பெட்டி (Trinitron TV set), பீட்டாமேக்ஸ் வி.சி.ஆர். (Betamax VCR), வாக்மேன் (Walk Man), சி.டி.ப்ளேயர் (CD Player), கேம்கார்டர் (Camcorder) என்று சோனி நிறுவனத்தின் புதுமையான அதிரடித் தயாரிப்புகள் வரிசையாக வெளிவந்து உலகையே கலக்கின என்றால் அது மிகையல்ல.

இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள், மிகச் சிறந்த பொறியியல் வல்லுனர்களாக விளங்கியதும், பொருளாதார நெருக்கடி மிகுந்த காலங்களிலும் அவர்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைக்கு (Research & Development department) தங்களின் இடைவிடாத ஆதரவை அளித்ததுமே ஆகும். தொழில்நுட்ப ஆற்றலைச் சரியான வகையில் பயன்படுத்தும் திட்டங்களின் மேல் அவர்கள் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை, "உலகில் முதல் முறையாக" என்ற அடையாளத்துடன் அவர்களின் நிறுவனத்திலிருந்து பல பொருட்கள் வெளி வந்து தமக்கென புதிய சந்தைகளை உருவாக்கிடக் காரணமாக அமைந்தன.

சோனி நிறுவனத்தில் மேலாளர்கள் பலரும் கென் (Gen) என்ற தத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். இதில் மூன்று கூறுகள் உள்ளன. கென்பா (Genba) என்பது உயர்நிலை மேலாளர்கள், ஆலையில் பணியாளர்களுடன் நெருங்கிப் பணி புரிந்து புதிய பொருட்களை உருவாக்குவதில் பங்கேற்பது. கெஞ்சோ (Genjo) என்றால் தற்போதைய சூழலை மனதில் கொண்டு வளர்ச்சியைத் திட்டமிடுவது. கென்பட்ஸு (Genbutsu) என்றால் விவரணைகள் அல்லது படங்களுக்குப் பதிலாக உண்மையான பொருளை உருவாக்கி அதன் நிறை-குறைகளை ஆராய்வது.

சோனி நிறுவனத்தின் இன்னொரு அம்சம், அதன் "சோனி தன்மை" (Sony Spirit) என்று அறியப்படும் பிரத்தியேக குணநலன் ஆகும். இதன் அடிப்படையில் புதிய பொருள் குறித்து அதில் பணியாற்றும் அனைவரிடமும் ஒரு தீவிரப் பிடிப்பு (passion) இருக்கும். சவால் மிகுந்த நோக்கங்களும் புதுமையான திட்டங்களும் இவர்களை இலக்கை நோக்கிச் செலுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. உதாரணமாக வண்ணத் தொலைக்காட்சி அறிமுகமாக காலகட்டத்தில் போட்டி நிறுவனமான ஆர்.சி.ஏ. (RCA), இத்துறையில் நிழல் முகமூடி (shadow mask) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தது. அன்றைய பல தொலைக்காட்சி உற்பத்தியாளர்கள், இந்தத் தொழில்நுட்பத்திற்கு உரிமம் பெற்றுப் பயன்படுத்தினர். ஆனாலும் சோனி நிறுவனம், அதனை விட சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உழைத்து ட்ரிநிட்ரான் (Trinitron) தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

பொருள் வடிவமைப்பு (Product Design), உற்பத்திச் செயலாக்க வடிவமைப்பு (Production Process Design), உற்பத்தி (Manufacturing) ஆகிய மூன்றுக்கும் இடையிலான உறவை நெருக்கமானதாக ஆகியதும் சோனி நிறுவனத்தின் இன்னுமொரு வெற்றியாகும். ஆராய்ச்சித் துறையிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் முதல்நிலை சிறு தயாரிப்பு ஆலைக்கும் (Pilot plant), பிறகு அங்கிருந்து உற்பத்தி ஆலைக்கும் (Manufacturing plant) பணிமாற்றம் செய்யப்படுவது மிக இயல்பான ஒன்றாகும். இவை, பொருள் வடிவமைப்பிலிருந்து உற்பத்தி நிலை வரை அனைத்து மாற்றங்களும் இயல்பாக நடைபெற உதவுகின்றன.

ஆனால் அனைத்து நிறுவனங்களும் சோனியைப் போல புதிய பொருட்களை அறிமுகம் செய்து இலாபம் ஈட்டுவதில் வெற்றி அடைவதில்லை. கிட்டத்தட்ட 200 புதிய பொருள் அறிமுகங்களை ஆய்வு செய்த கூப்பர்-க்ளெயின்ஷ்மிட் (Cooper-Klienschmidt) ஜோடி, புதிய பொருள் வெற்றிக்கான தன்மைகளை பட்டியலிட்டுள்ளது. முதலிடத்தில் இருப்பது, புதிய பொருள், உள்ளபடியே அதிக பயனை அளிக்கின்ற முன்னேறிய பொருளாக இருக்க வேண்டும் (unique superior/improved product) என்பதே. அதிக அளவில் முன்னேற்றம் உடைய புதிய பொருள், 98% வரை சந்தையில் வெற்றி அடைந்தது. சுமாரான முன்னேற்றம் உடைய புதிய பொருள் 58% அளவிலும், குறைந்த முன்னேற்றம் உடைய புதிய பொருள் 18% அளவிலும் சந்தையில் வெற்றி அடைந்தன. வெற்றிக்கான இன்னுமொரு தன்மை, பொருள் உருவாக்கத்திற்கு முன்பாக தெளிவான பொருள் கொள்கையோடு இருப்பது ஆகும் (clear product concept before and during development stage.) பொருள் வடிவமைப்பின் போதே சந்தையின் அளவு, சந்தையின் எதிர்பார்ப்பு, பொருளின் வெவேறு தன்மைகள் ஆகியவை குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது இதன் கீழ் அடங்கும். மற்ற காரணங்கள் தொழில்நுட்பமும் மார்க்கெட்டிங்கும் இணைந்து இயங்குவது (technological and marketing synergy), அனைத்து நிலைகளிலும் உயர்தரத்தைப் பின்பற்றுவது (quality of execution in all stages) மற்றும் சந்தையின் அளவு, வாங்கும் திறன் (attractiveness of the market) ஆகியவை.