மார்ல்போரோ மனிதன் (Marlboro Man)
1950-களில் ஃபிலிப் மாரிஸ் (Philip Morris) நிறுவனம், மார்ல்போரோ (Marlboro) என்ற பெயரில் பெண்களுக்கான சிகரெட்டைத் தயாரித்து விற்பனைக்கு அளித்து வந்தது. எந்த அளவுக்கு 'பெண்களுக்கானது' என்ற எண்ணம் பரவியிருந்தது என்றால் இதன் விளம்பரங்களிலேயே, "உங்கள் அழகான விரல்களுக்கும் உதடுகளுக்கும் ஏற்றது" (to match your lips and finger tips) என்று கூறப்பட்டு வந்தது. 1954-ல் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இதன் பங்கு சுமார் 0.25% ஆக இருந்தது.
"வந்தா மலை. போனா ம...." என்ற எண்ணத்தோடு மார்ல்போரோ என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு "பஞ்சு வச்ச" சிகரெட்டை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது நிறுவனம். அப்போது அமெரிக்க விளம்பர உலகில் புகழ் மிக்க லியோ பர்னெட் (Leo Burnett) தனது விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரிடம் இதற்கான விளம்பரப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் சிகரெட் அட்டையிலிருந்த நிறம் இளஞ்சிவப்பிலிருந்து (pink) ரத்தச் சிவப்பாக (solid red) மாற்றப்பட்டது. Flip-top வடிவத்திலான சிகரெட் அட்டையும் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. விளம்பர நிறுவனத்திலிருந்த ஒருவர் ஆண்மைக்கான அடையாளமாக அமெரிக்க கௌபாயின் (CowBoy) படத்தை சிபாரிசு செய்தார். "Delivers the goods on flavor" என்ற வாசகத்தோடு அமைக்கப்பட்ட விளம்பரம், மிகப் பிரமாதமாக வேலை செய்தது. ஒரே ஆண்டில் விற்பனை 5 பில்லியன் டாலர்கள். அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனை 20 பில்லியன்
டாலர்கள். இப்படித்தான் அவதரித்தார் விளம்பர உலகின் சூப்பர் ஸ்டார். (pun not intended!!)
இதே காலகட்டத்தில் தான் 1957-ல் பத்திரிக்கையில் முதல் முதலாக புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் சுவாசப் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற கருத்தை முன் வைத்து ஒரு கட்டுரை வெளியானது. ஆனாலும் மார்ல்போரோ மனிதன் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரித்துக் கொண்டே போனார். 1972-ல் உலகில் மிக அதிகமாக புகைக்கப்படும் சிகரெட்டாக மார்ல்போரோ விளங்கியது.
உலகின் மிகச் சக்தி வாய்ந்த விளம்பர பிம்பம் (most powerful advertising icon) என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு (ஏன், மூளையை மூடிக் கொண்டும்) தாராளமாகச் சொல்லி விடலாம், மார்ல்போரோ மனிதன் தான் என்று. அது மட்டுமில்லாமல் மிக வெறுக்கப்பட்ட ஒரு விளம்பர பிம்பமும் மார்ல்போரோ மனிதனே. குதிரை மேல் அமர்ந்து ஒரு கௌபாயாக அவர் மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் மிக்க கவனம் பெற்றன. இங்கே சாம்பிளுக்கு ஒரு பின்னாளைய விளம்பரம்:

இப்போது இந்தக் கதையை எதற்குச் சொன்னேன் என்பதைப் பார்க்கலாம். அண்மையில் மும்பையில் புற்று நோயாளிகள் உதவி மையத்தின் சார்பில் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கண்டித்து ஒரு சாலையோர விளம்பரப் பலகை அமைக்கப்பட்டது. விளம்பர நிறுவனம் - ஓகில்வி & மாத்தெர் (Ogilvy & Mather). இன்றைய தேதிக்கு இந்தியாவின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் இயக்குனர் பியூஷ்
பாண்டேயின் (Piyush Pandey) கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மார்ல்போரோ மனிதன் என்ற கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டு என்னமாய் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனிதர். கொஞ்சம் பாருங்கள்:

நான் கல்லூரியில் படித்த காலத்தில் எனது இறுதியாண்டில் என் பேட்ச் மாணவர்கள் சிலரின் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மிகவும் மனம் நொந்து அதைக் கண்டித்து கல்லூரியின் மரங்களின் மேல் சில போஸ்டர்களை வரைந்து வைத்தேன். இந்த விளம்பரப் பலகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
நெகிழ்ச்சியையும் அளித்தது.
வெல்டன் பாண்டே சார்.